81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்
81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்
81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்
ADDED : ஜூன் 08, 2024 02:10 AM
சென்னை:தமிழகத்தில், 81 சட்டசபை தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி, 10 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே முதலிடத்தை பிடித்துள்ளது.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணி கைப்பற்றி உள்ளது. ஆனாலும், கடந்த தேர்தலை விட, ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல, அ.தி.மு.க.,வும் கடும் சரிவை கண்டுள்ளது. 39 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 234 சட்டசபை தொகுதிகளில், 10 தொகுதிகளில் மட்டுமே, அ.தி.மு.க., முதலிடம் பிடித்துள்ளது.
திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, எடப்பாடி, சங்ககிரி, பரமத்திவேலுார், குமாரபாளையம், அரியலுார், ஜெயங்கொண்டம், திருமங்கலம், விருதுநகர் தொகுதிகளில், அ.தி.மு.க., முதலிடத்தை பிடித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க., முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம், 234 சட்டசபை தொகுதிகளில், இதுவரை இல்லாத வகையில், 81 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
தென்மாவட்டங்களில், சில சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு சட்டசபை தொகுதிகளில், மூன்றாம் இடத்திற்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டு இருப்பதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.