ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது
ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது
ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது
ADDED : ஜூன் 23, 2024 11:44 PM

தேனி : தேனி மாவட்டம், சுக்குவாடன்பட்டி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஆசை காட்டப்பட்டது. வடபுதுபட்டி முனியாண்டி சுவாமி கோவில் தெரு பிரேமா, 37, இதை நம்பி, நிறுவன மேலாளர் மணிகண்டன் வாயிலாக, 2023 செப்டம்பர் முதல் 2024 ஜனவரி வரை, 47 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
தவிர, நிறுவனத்தில் இயக்குனராக்குவதாக கூறி பிரேமாவிடம், மணிகண்டன் மேலும், 25 லட்சம் ரூபாய் பெற்றார். முதிர்வு காலம் முடிந்ததால் பணத்தை திரும்ப கேட்டார். திரும்ப வழங்காமல் மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்தார். பிரேமா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
நிறுவனம் சார்பில் மேலும் ஏழு பேரிடம் முதலீடாக, 26 லட்சம் ரூபாயை வாங்கியது உட்பட, 99.50 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. நிறுவன இயக்குனர்கள், கணக்காளர் உட்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.