Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை ரூ.105 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை ரூ.105 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை ரூ.105 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை ரூ.105 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ADDED : ஜூன் 26, 2024 05:56 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'விவசாயிகளின் நலன் கருதி 2024-25ம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை கூடுதலாக வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-25ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்று 2,405 ரூபாய்க்கும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்று 2,450 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us