Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தேங்காய்க்கு ஸெஸ் வரி ரத்து செய்ய கோரிக்கை

தேங்காய்க்கு ஸெஸ் வரி ரத்து செய்ய கோரிக்கை

தேங்காய்க்கு ஸெஸ் வரி ரத்து செய்ய கோரிக்கை

தேங்காய்க்கு ஸெஸ் வரி ரத்து செய்ய கோரிக்கை

ADDED : மார் 12, 2025 02:50 AM


Google News
பொள்ளாச்சி: 'தேங்காய்க்கு விதிக்கப்படும் 1 சதவீதம் ஸெஸ் வரியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி தென்னை விவசாயி தங்கவேலு கூறியதாவது:


பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் வெள்ளை ஈ, வேர் வாடல் நோய்களால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு வேளாண் வணிகத்துறை வாயிலாக சேவை கட்டணமாக, தேங்காய்க்கு 1 சதவீத ஸெஸ் வரி வசூல் செய்வது சுமையை அதிகரித்துள்ளது.

உற்பத்தி குறைந்து துயரத்தில் உள்ள விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையில், அரசு 1 சதவீத ஸெஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us