'யு டியூப்' நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு
'யு டியூப்' நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு
'யு டியூப்' நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:20 AM
சென்னை: 'யு டியூப்' சேனல் தலைமை நிர்வாகிக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பெண் போலீசாரை மற்றும் போலீஸ் அதிகாரி களை அவதுாறாக பேசிய தாக, சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இவரது பேட்டியை ஒளிபரப்பிய, யு டியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் மனு தாக்கல் செய்தார். நீண்ட நாட்கள் சிறையில் இருப்பதாகவும், ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதாகவும், மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. ஜாமின் வழங்க, போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.