'ஆல்கஹால் அளவை பதிவு பண்ணுங்க!': தமிழக சுகாதாரத்துறை
'ஆல்கஹால் அளவை பதிவு பண்ணுங்க!': தமிழக சுகாதாரத்துறை
'ஆல்கஹால் அளவை பதிவு பண்ணுங்க!': தமிழக சுகாதாரத்துறை
ADDED : ஜூன் 25, 2024 01:20 AM

சென்னை: 'சாலை விபத்து காரணமாக, மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நபரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு பரிசோதிக்கப்படுவது கட்டாயம்' என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
விபத்துகளின் போது மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நபர்களின் ரத்தத்தில், 'ஆல்கஹால் அளவு குறித்த விபரம் எதுவும் விபத்து பதிவேட்டில் குறிப்பிடப்படுவதில்லை.
விபத்தின் போது சம்பந்தப்பட்ட நபர், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மது அருந்தியுள்ளாரா என்பது குறித்த அறிவியல்பூர்வ தரவுகள், வழக்குக்கு அவசியமானவை.
எனவே, காயம் அல்லது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நபர்களிடம், ரத்த பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அவர்களிடம், மது வாசனை வீசினால், ஆல்கஹால் அளவு குறித்து உரிய பதிவேடுகளில் குறிப்பிடப்படுவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.