திடீர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
திடீர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
திடீர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
ADDED : ஜூலை 21, 2024 04:28 PM

திருப்பூர்: ஹிந்து கோவில்களை சீரழிக்கும் தமிழக அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், திருப்பூரில், ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ஹிந்து முன்னணியினர் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், நள்ளிரவு திடீரென போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் உட்பட 900 பேரை போலீசார் கைது செய்தனர். காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
நள்ளிரவு திடீரென ஆர்ப்பாட்டத்தக்கு அனுமதி மறுத்தனர். எமர்ஜென்சி காலத்தைக் காட்டிலும் மோசமாக, தி.மு.க., அரசின் நடவடிக்கை உள்ளது. தொடர்ந்து ஆட்சி இப்படி செயல்பட்டால், வரும் காலத்தில் காணாமல் போய் விடும்.
ஹிந்துக்களுக்கு மட்டும் விரோதமாக நடக்கிறது. ஹிந்து கோவில்களை மட்டும் இடிக்கின்றனர். கோவில் சொத்துகளை காப்பாற்ற வேண்டும். வரும் தேர்தலில் பாடம் கற்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதுபோல, மாநிலம் முழுக்க, மாவட்ட தலைநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஹிந்து முன்னணியினர் பலர் கைது செய்யப்பட்டனர்.