90 நாள் கெடாத பாலின் விலை 2 ரூபாய் குறைப்பு
90 நாள் கெடாத பாலின் விலை 2 ரூபாய் குறைப்பு
90 நாள் கெடாத பாலின் விலை 2 ரூபாய் குறைப்பு
ADDED : ஜூலை 03, 2024 01:46 AM
சென்னை:அதிக நாட்கள் கெடாமல் பயன்படுத்தும் பாலின் விலையை, ஆவின் நிறுவனம், 2 ரூபாய் குறைத்துள்ளது.
ஆவின் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீலம், ஊதா நிற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, குளிர்சாதன வசதியில்லாமல், 90 நாட்கள் திறந்த வெளியில் வைத்து பயன்படுத்தும் பாலையும், ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது.
புயல், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், இந்த பால் பாக்கெட் பெரிதும் உதவும். தொலை துார பயணங்களுக்கும் இது உதவுகிறது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் தேநீர், காபி தயாரிப்பதற்கு, இந்த பால் பாக்கெட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பால் பாக்கெட் 450 மில்லி 30 ரூபாய்க்கும், 150 மில்லி 12 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாக்கெட்டிற்கு 2 ரூபாயை ஆவின் நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, 450 மில்லி 28 ரூபாய், 150 மில்லி 10 ரூபாய் என, புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கையிருப்பு அதிகரித்து உள்ளதால், பாலின் விலையை ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.