பொன் ராதாகிருஷ்ணன் ஓட்டு குறைந்தது; கன்னியாகுமரியில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்
பொன் ராதாகிருஷ்ணன் ஓட்டு குறைந்தது; கன்னியாகுமரியில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்
பொன் ராதாகிருஷ்ணன் ஓட்டு குறைந்தது; கன்னியாகுமரியில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்
ADDED : ஜூன் 05, 2024 06:53 AM

நாகர்கோவில : கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் விஜய் வசந்த் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019-ல் வெற்றி பெற்ற வசந்தகுமார்(காங்.,) காலமானதை தொடர்ந்து 2021 இடைத்தேர்தலில் விஜய் வசந்த் ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 37 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
இந்த தேர்தலில் அவருக்கு 30,000 ஓட்டுகள் குறைந்துள்ளது. இதுபோல அ.தி.மு.க. கூட்டணியுடன் 2021-ல் நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 87 ஓட்டுகள் பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் தற்போது 91 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார்.
இங்கு நான்கு முனை போட்டி நிலவினாலும் காங்., மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவியது. 15, 816 தபால் ஓட்டுகள் உட்பட 10 லட்சத்து 32 ஆயிரத்து 657 ஓட்டுகள் பதிவானது.