பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்
பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்
பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்
ADDED : ஜூன் 03, 2024 06:36 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் உள்ள தன் குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளருமான பன்னீர்செல்வம், தன் தேர்தல் சின்னமான பலாப்பழத்தை வைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார்.
நேற்று காலை 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்த பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். கோவிலில் கொடி மரத்தை வணங்கி, ஆண்டாள் சன்னிதியில் தரிசனம் செய்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்தார். பின், வடபத்திர சயனர் கோவிலில் ஆண்டாள் நந்தவனம், சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின், தன் குலதெய்வமான செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு, அம்மன் காலடியில் பலாப்பழத்தை வைத்து வழிபட்டார். பின், கும்பாபிஷேகம் நடந்த வைத்தியநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.