நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.
நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.
நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.
ADDED : ஜூன் 06, 2024 10:07 PM
புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே அரசர்க்குளம் பகுதியில் நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்து, 8 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்க்குளம் பகுதியில் உள்ள குளத்திற்கு நேற்றுமுன் மாலையில் குளிக்க சென்ற சாத்தியம்மாள்(70) என்பவரை நோட்டமிட்டு, குளத்தில் குளிக்கும் போது அவரை மர்ம நபர்கள் மூழ்கடித்து கொலை செய்து 15-சவரன், 8 லட்ச ரூபாய் நகைகளை மர்ம நபர்கள் கொலை செய்து திருடி சென்றனர்.
தொடர்ந்து, குளத்திற்கு குளிக்க சென்ற மூதாட்டியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் குளத்தில் தேடிய போது, மூதாட்டி குளத்தில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து, நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.