வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை
வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை
வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 07, 2024 03:37 AM

திட்டக்குடி: ராமநத்தத்தில் தனியார் நிறுவன ஊழியர், மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பெரியசாமி, 28; பெரம்பலுார், சின்னாறு பகுதியில் உள்ள தனியார் செருப்பு கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடலுார் மாவட்டம், ராமநத்தம் நேதாஜி நகரில் நண்பர் பிரபாகரனுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
பிரபாகரன் கடந்த 4ம் தேதி இரவு பணிக்கு சென்றவர் நேற்று (6ம் தேதி)காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பெரியசாமியை காணவில்லை. அவரை தேடியபோது, வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.