Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இரு மொழிக்கொள்கையில் தான் என் மகன்கள் படித்தனர் * அண்ணாமலைக்கு அமைச்சர் தியாகராஜன் பதிலடி

இரு மொழிக்கொள்கையில் தான் என் மகன்கள் படித்தனர் * அண்ணாமலைக்கு அமைச்சர் தியாகராஜன் பதிலடி

இரு மொழிக்கொள்கையில் தான் என் மகன்கள் படித்தனர் * அண்ணாமலைக்கு அமைச்சர் தியாகராஜன் பதிலடி

இரு மொழிக்கொள்கையில் தான் என் மகன்கள் படித்தனர் * அண்ணாமலைக்கு அமைச்சர் தியாகராஜன் பதிலடி

ADDED : மார் 13, 2025 07:14 PM


Google News
மதுரை:''என் இரு மகன்களும் இருமொழிக் கொள்கை திட்டத்தில் தான் படித்தனர்,'' என, மதுரையில் அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் அமைச்சர் தியாகராஜன், ''தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க பா.ஜ., முயற்சிக்கிறது,'' என குற்றம்சாட்டி பேசியிருந்தார். அதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ''தியாகராஜனின் மகன்கள் எந்த மொழியில் படித்தனர்,'' என கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு அமைச்சர் தியாகராஜன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து, மதுரையில் தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது ஏழு மாநிலங்களை சேர்ந்த 29 கட்சிகளுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இச்சூழ்நிலையில், கூடுதல் மொழியை கட்டாயப்படுத்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், ஆயிரக்கணக்கில் புதிய ஆசிரியர்கள் தேவைப்படுவர். அதற்கான நிதி, கட்டட வசதி இதற்கெல்லாம் யார் செலவிடுவது? கொள்கை என்று நீங்கள் எழுதிக் கொடுக்குறீர்கள். அதை செயல்படுத்தும் மாநிலங்களுக்குத்தானே கஷ்டம்?

ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கும்போது, சமூக நீதிக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி என்பது தான், அரசின் கடமையாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் அனைத்தும் சரியாகவே சென்று கொண்டிருக்கிறது.

அமைச்சர்கள் 34 பேரின் குழந்தைகள் எங்க படிக்கிறார்கள் என அண்ணாமலை உள்ளிட்ட சிலர் கேள்வி கேட்டு புரளி கிளப்புகின்றனர். அவர்கள் எங்கு படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எட்டு கோடி மக்களுக்கு என்ன கல்வித் திட்டம் என்பது தான் முக்கியம். எந்த வாதத்தையும் தனி நபர்களுக்காக திசை திருப்பக்கூடாது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தியாகராஜன் பசங்கள் எத்தனை மொழி படித்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு இரண்டு மகன்கள். அவர்கள் எல்.கே.ஜி., முதல் ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் இருமொழிக் கொள்கையில் தான் படித்தார்கள். தமிழகத்தில் ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்கள் இரு மொழியில் தான் படிக்கின்றனர். இங்கு அனைவரும் சமமாக கல்வி பயில்கின்றனர்.

ஆனால், ஏழைக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். தேவை இரு மொழி. அதற்கு மேல், யார் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம்.

தமிழகத்தில் என்றைக்கும் இருமொழிக் கொள்கை தான் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us