மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2024 10:42 AM

சென்னை: வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள் என ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.