வடிகால் துார்வாரும் பணிகள் நிலை தலைமை செயலருக்கு அமைச்சர் கடிதம்
வடிகால் துார்வாரும் பணிகள் நிலை தலைமை செயலருக்கு அமைச்சர் கடிதம்
வடிகால் துார்வாரும் பணிகள் நிலை தலைமை செயலருக்கு அமைச்சர் கடிதம்
ADDED : ஜூன் 05, 2024 11:42 PM
புதுடில்லி;மழைக்காலம் நெருங்கி வருவதால், வடிகால்களை துார்வாருவது தொடர்பான அறிக்கையை இன்று மாலைக்குள் அளிக்கும்படி, தலைமை செயலருக்கு மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடிதம் எழுதினார்.
தலைமைச் செயலருக்கு எழுதிய அமைச்சர் சவுரப் பரத்வாஜ் எழுதிய கடிதம்:
கடந்த ஆண்டு மழையின்போது, அதிகளவில் தண்ணீர் தேங்கி சிக்கல் ஏற்பட்டது, உங்களுக்கு நினைவிருக்கும். எங்கள் கடந்த கால அனுபவத்தின்படி, டில்லியில் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் இந்த ஆண்டு முனைப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் வடிகால்களை துார்வாருவது என்பது மிக முக்கியமான பணி.
வடிகால்களை துார்வாரும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த பணிகளை முடுக்கிவிடுங்கள்.
முன்பே நான் கேட்ட அறிக்கையை இதுவரை நீங்கள் தாக்கல் செய்யவில்லை. உங்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. நான் நிலை அறிக்கையைக் கேட்டு 15 நாட்களாகியும், ஆனால் நீங்கள் நிலை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
வடிகால் துார்வாரியது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை (இன்று) மாலைக்குள் தகவல்களை சமர்ப்பிக்குமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் மூலம் இதுதொடர்பாக அனைத்து துறைகளின் கூட்டத்தை கூட்டி, துறைகளுக்கு மேலும் வழிகாட்டுதல்களை வழங்க முடியும்.
இவ்வாறு கடிதத்தில் அமைச்சர் கூறியுள்ளார்.