ADDED : ஜூன் 22, 2024 01:01 AM
* பிளஸ் 1 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வரும், 2ம் தேதி சிறப்பு துணைத் தேர்வு துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், வரும், 25ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
செய்திகள்
சில வரிகளில்/
* துாத்துக்குடி மாவட்டம், வ.உ.சி., துறைமுகம் அருகில், மின் வாரியத்திற்கு துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐந்தாவது அலகில் பராமரிப்பு பணிக்காக இம்மாதம், 8ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு வரும், 28ம் தேதி மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.