Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ADDED : ஜூன் 01, 2024 03:42 AM


Google News
மே மாதம் இறுதி நாளான நேற்று, தமிழக தலைமை செயலகத்தில், நிதித்துறையில் கூடுதல் செயலர், இணை செயலர் உட்பட ஐந்து பேர்; மனிதவள மேலாண்மை துறையில் இருவர்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நான்கு பேர்; சட்டசபை செயலகத்தில் இணை செயலர் ஆதிசேஷன் உட்பட ஐந்து பேர்; பொதுத் துறையில் எட்டு பேர் என, மொத்தம் 35 பேர் ஓய்வு பெற்றனர். இவர்களில், ஒருவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

வருவாய் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை கலெக்டர்கள் அந்தஸ்து அதிகாரிகள் 19 பேர், தாசில்தார்கள் 15 பேர் நேற்று ஓய்வு பெற்றனர்.

தமிழக மின் வாரியத்தில் மின் உற்பத்தி பிரிவு இயக்குனராக இருந்த டி.ராஜேந்திரன், மின் பகிர்மான பிரிவு இயக்குனர் ஆர்.மணிவண்ணன், சென்னை வடக்கு மண்டல தலைமை பொறியாளர் ஜெ.சுகுமார் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.

நீர்வளத்துறையில், 12 தலைமை பொறியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில், கோவை மண்டல தலைமை பொறியாளர் சிவலிங்கம், திட்டம், வடிவமைப்பு மற்றும் கட்டுமான உதவி பிரிவு தலைமை பொறியாளர் லதா, மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மைய தலைமை பொறியாளர் பிரபாகர், நீராய்வு நிறுவன தலைமை பொறியாளர் காஜா மொஹிதீன், மாநில நீர்வள மேம்பாட்டு முகமை தலைமை பொறியாளர் சாதனா ஆகிய ஐந்து பேர் நேற்று ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர். இவர்களால், ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக சட்டசபை கூட்டம் இம்மாத இறுதி வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிலுவை பணிகள், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அறிவதற்காக, சென்னையில் வரும், 11ம் தேதி முதல் மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் நடக்க உள்ளது. மாவட்டங்கள் அனைத்தும், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வரும், 11, 13, 15, 17ம் தேதிகளில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், இந்த கூட்டம் நடக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us