Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மதுரை--போடி அகல ரயில் மின் பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

மதுரை--போடி அகல ரயில் மின் பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

மதுரை--போடி அகல ரயில் மின் பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

மதுரை--போடி அகல ரயில் மின் பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

ADDED : ஜூன் 17, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
போடி: மதுரை -- போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் 121 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக முடிந்தது. விரைவில் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புக்கள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வேயில் 160 கி.மீ., வேகத்திலும், அதற்கு அதிகப்படியான வேகத்திலும் இயக்கக்கூடிய வகையில் அகல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2023 அக்.,12ல் மதுரை முதல் போடி வரை 110 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

இந்நிலையில் மதுரை - போடி வழித்தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்டதால் 2024 மார்ச் 23 ல் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடந்தது. அதன் பின் மின் வழித்தடங்களில் ஆய்வு பணிகள் மூன்று மாதங்களாக நடந்தன.

பணிகள் முடிந்த நிலையில் நேற்று கோட்ட (சிவில்) முதுநிலை பொறியாளர் சூர்யமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினருடன் நேற்று மதுரையில் இருந்து மதியம் 2:28 மணிக்கு புறப்பட்ட சோதனை ஓட்ட ரயில் மதியம் 3:35 மணிக்கு 121 கி.மீ., வேகத்தில் 3 பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் 7 நிமிடங்களில் போடி ரயில்வே ஸ்டேஷன் வந்தது. மறுமார்க்கத்தில் 90 கி.மீ., வேகத்தில் மாலை 4:06 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு சென்றது.

இந்த ஆய்வு ரயிலில் கணினி ஜி.பி.எஸ்., கருவியுடன் கூடிய அகல ரயில் பாதையில் அதிர்வுகளை கண்டறியும் 'ஆசிலேசன் மானிட்டரிங் சிஸ்டம்' (Oscillation Monitoring System) என்ற தொழில் நுட்பத்துடன் கூடிய கருவியால் அகல ரயில் பாதை அதிர்வுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஆய்வு செய்யப்பட்டு, விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் ரயில் பாதையில் இணையும் மேம்பாலப் பகுதிகள், முக்கிய வளைவுகள், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மின் வழித்தட பயன்பாட்டிற்கான கருவிகள், மின் மயமாக்கப்பட்ட நிலையில் இடையூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் அதிவிரைவு, பயணிகள் விரைவு ரயில்களின் வேகம் அதிகரித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை ஓட்டத்தை முன்னிட்டு பூதிப்புரம், வலையபட்டி, ஆதிபட்டியில் ரயில்வே போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us