ஆந்திர மணலுக்கு அனுமதி லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கடிதம்
ஆந்திர மணலுக்கு அனுமதி லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கடிதம்
ஆந்திர மணலுக்கு அனுமதி லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கடிதம்
ADDED : ஜூலை 06, 2024 11:46 PM
சென்னை:ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர, அனுமதி பெற்றுத் தருமாறு, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முனிரத்தினம் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த 10 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 75,000 மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும், 10 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மணல் இல்லாமல் கட்டுமான தொழில், தமிழகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வரும் 8ம் தேதி முதல் 120 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர, அம்மாநில முதல்வரிடம் பேசி, தமிழக முதல்வர் அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
இதன் வாயிலாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம், வீடுகள் கட்டுமான பணிகள் தடையின்றி நடக்கும். மணலை நம்பியுள்ள லாரி உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.