சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'
சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'
சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு 7 'ஆண்டு'
ADDED : ஜூன் 17, 2024 12:31 AM
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கொசப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வகுமார், 25. இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, 2015 செப்., 17ல் கடத்திச்சென்று கட்டாய பதிவு திருமணம் செய்து கொண்டார்.
சிறுமிக்கு, 18 வயது ஆகாத நிலையில், அவரது அக்காவின் கல்வி சான்றிதழை போலி ஆவணமாக பயன்படுத்தி, செல்வகுமார் பதிவு செய்தார். மேலும், பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டார். இதனால் ஆரணி டவுன் போலீசார், செல்வகுமாரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கை விசாரித்து, நேற்று முன்தினம் செல்வகுமாருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.