கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்
கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்
கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

அப்பாவு விளக்கம்
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன். கேள்வி நேரம் மக்களுக்கான நேரம். எதிர்க்கட்சிகளுக்கு பேச முறைப்படி அனுமதி உண்டு. எதிர்க்கட்சியினருக்கு எந்த நோக்கம் இருக்கு என்று தெரியவில்லை.
சி.பி.ஐ., விசாரணை அவசியம்
சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: மக்களுடைய உயிர் பிரச்னை என்ற வகையில் சட்டசபையில் பேச அனுமதி கோரினோம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதி தர மறுத்துவிட்டார். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நடைபெறவில்லை என மாவட்ட கலெக்டர் முதலில் கூறினார். கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
வேற என்ன முக்கிய பிரச்னை
கள்ளக்குறிச்சியில் போலீசாருக்கு தெரிந்தே, கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. மக்கள் உயிரைப் பறித்த சண்டாளர்களை தண்டிக்க நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார். இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை அவசியம். தமிழக அரசின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால் உண்மை வெளி வராது.