பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்
பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்
பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்
ADDED : ஜூலை 03, 2024 02:27 AM
சென்னை:இந்த ஆண்டு குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை, கொள்ளு ஆகிய, 14 வேளாண் பயிர்களுக்கும்; வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி, முட்டைகோஸ் ஆகிய 12தோட்டக்கலை பயிர்களுக்கும், பயிர்காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு கடந்த மாதம் 21ம் தேதி முதல் மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில்நடக்கிறது. முக்கிய பயிரான குறுவை நெற்பயிரை ஜூலை 31 வரை, விவசாயிகள்காப்பீடு செய்யலாம்.
எனவே விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில், அறிவிப்பு செய்த பகுதிகளில், அறிவிக்கப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.