'சிமி' அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க விசாரணை
'சிமி' அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க விசாரணை
'சிமி' அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க விசாரணை
ADDED : ஜூன் 18, 2024 06:35 AM

கோவை: 'சிமி' அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்தல் தொடர்பாக, குன்னுார் நகராட்சி அலுவலகத்தில் இன்றும், நாளையும்(ஜூன் 18, 19) விசாரணை நடக்கிறது.
கோவை மாநகர போலீசார் அறிக்கை:
இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பை(சிமி) ஒரு சட்ட விரோத அமைப்பாக அறிவித்தல் தொடர்பாக, டில்லி ஐகோர்ட் நீதிபதி புருசைந்திர குமார் கவுரவ் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) நடுவர் மன்றம், குன்னுார் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்றும், நாளையும் நடக்கிறது.
இதுகுறித்து சாட்சியம் அளிக்க விரும்புவோர், தங்கள் பிரமாண பத்திரங்களை(இரு நகல்கள்) தாக்கல் செய்யலாம். காலை, 10:00 மணி முதல் விசாரணை நடைபெறும் நிலையில் குறுக்கு விசாரணை ஏதேனும் இருப்பின், அதற்கான நடுவர் மன்றத்தில் நேரில் ஆஜராகலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.