உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை
உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை
உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை
ADDED : ஜூலை 07, 2024 04:49 AM

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் நேற்று மாலை 6.15 மணியளவில் ரூ.
500 நோட்டுகள் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. 50 மீட்டர் தொலைவிற்கு பரவிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இந்த சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா, அல்லது தவறி கீழே விழுந்ததா, எவ்வளவு பணம் விழுந்தது என அப்பகுதியில் கிடைத்த கேமரா பதிவுகளின் அடிப்படையில் உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த பணம் குறித்து யாரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை.