மாரடைப்பால் இறப்பு அதிகரிப்பு; விழிப்புணர்வு பயிற்சிக்கு உத்தரவு
மாரடைப்பால் இறப்பு அதிகரிப்பு; விழிப்புணர்வு பயிற்சிக்கு உத்தரவு
மாரடைப்பால் இறப்பு அதிகரிப்பு; விழிப்புணர்வு பயிற்சிக்கு உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 11:24 PM
கோவை : மாரடைப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கல்லுாரிகளில் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க, பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
யு.ஜி.சி., தரப்பில் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். புள்ளி விபரங்களின் படி, 1 கோடி இறப்புகளில், 10 லட்சம் இறப்புகள் மாரடைப்பால் ஏற்படுகின்றன.
மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு, 3 முதல் 10 நிமிடங்கள் மிக முக்கியமான நேரம்.
அடிப்படை உயிர் காக்கும் செயல்பாடுகளை, அந்த நேரத்தில் மேற்கொண்டால், பல உயிர்களை காக்க முடியும்.
ஆனால், உயிர்காக்கும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு, 0.01 சதவீத மக்களுக்கு மட்டுமே உள்ளது.
இதனால், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பி.எல்.எஸ்., எனப்படும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.