நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எப்படி: சி.பி.சி.ஐ.டி., தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எப்படி: சி.பி.சி.ஐ.டி., தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எப்படி: சி.பி.சி.ஐ.டி., தகவல்
ADDED : ஜூலை 11, 2024 05:04 AM

மதுரை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி எந்தெந்த வகையில் நடந்தது என சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமை சில ஆவணங்களை தர மறுப்பதாகவும் தெரிவித்தது.
சென்னை தண்டையார்பேட்டை உதித்சூர்யா. இவர் 2019 ல் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர்ந்ததாக கண்டமனுார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர். படிப்பை தொடர விருப்பமின்றி, விலகிக் கொள்வதாக கல்லுாரிக்கு உதித்சூர்யா கடிதம் அளித்தார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கராக செயல்பட்ட சென்னை கீழ்பாக்கம் தருண்மோகன் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி., தரப்பு: நீட் தேர்வு நடந்த தேதியில்உதித்சூர்யா சென்னையிலும், அவரது பெயரில் மும்பையில் வேறொருவரும் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் எழுதியஉதித் சூர்யா 135 மதிப்பெண், அவருக்காக மும்பையில் எழுதியவர் 385 மதிப்பெண் பெற்றுஉள்ளனர். மும்பையில் எழுதியவரின் மதிப்பெண் அடிப்படையில் உதித் சூர்யா தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்துஉள்ளார்.
திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ரான் என்ற மாணவருக்காக ஜார்கண்ட், உ.பி.,ராஜஸ்தானில் சிலர் 2019 மே5 ல் தேர்வு எழுதியுள்ளனர். அப்போது முகமது இப்ரான் மொரிஷியசில் இருந்துள்ளார். இத்தேர்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவு, தேர்வில் பங்கேற்றோரின் கைரேகை பதிவு, ஆதார் விபரங்களை தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.,) கோரினோம். தர மறுக்கிறது. தந்தால்தான் முறைகேட்டில்யார், யாருக்கு எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பது தெரியவரும்.இவ்வாறு தெரிவித்தது. என்.டி.ஏ.,சார்பில் அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி ஜூலை 16க்கு ஒத்திவைத்தார்.