பா.ஜ., கூட்டணிக்கு பலத்த அடி: மார்க்சிஸ்ட்
பா.ஜ., கூட்டணிக்கு பலத்த அடி: மார்க்சிஸ்ட்
பா.ஜ., கூட்டணிக்கு பலத்த அடி: மார்க்சிஸ்ட்
ADDED : ஜூன் 05, 2024 01:01 AM
சென்னை:'பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சிக்கு பலத்த அடி. 'இண்டியா' கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றி' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேர்தல் முடிவுகளில், பா.ஜ.,வின் அதிகார பலம், தில்லுமுல்லுகள், பணபலம், வெறுப்பு பேச்சுகள் இவைகளை முறியடித்து, பா.ஜ., தனித்த ஆட்சிக்கு வாக்காளர்கள் முடிவு கட்டியுள்ளனர். பா.ஜ., கோட்டையாகக் கருதப்பட்ட உ.பி., உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பா.ஜ., படுதோல்வி அடைந்துள்ளது. திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, வாக்காளர்கள் தவிடுபொடியாக்கி உள்ளனர்.
'மோர் சார் சோ பார் 400' என்ற முழக்கம் பொய்ப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க., தலைமையிலான 'இண்டியா' கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மதவெறி சக்திகளின் பணபலம், அதிகார பலம், தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, 'இண்டியா' அணி வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது.
பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்தாலும், தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாது என்று, தமிழக வாக்காளர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.