அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்
அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்
அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்
ADDED : ஜூன் 08, 2024 01:25 AM
சென்னை:தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநில அளவில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரக்கோணத்தில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மாநிலங்களின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதனால், சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
மாநிலத்தில் எந்த பகுதியிலும் இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை. அதே நேரம் வரும் 11ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் இயல்பு அளவில் இருந்து, அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.