உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது
உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது
உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது
ADDED : ஜூலை 17, 2024 09:52 AM

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 17) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.55 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத அளவில் 55 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 6 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை, ரூ.55 ஆயிரத்தை தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1 ரூபாய் உயர்ந்து, 100 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.