ஆடு வெட்டிய விவகாரத்தை வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து
ஆடு வெட்டிய விவகாரத்தை வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து
ஆடு வெட்டிய விவகாரத்தை வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : ஜூலை 15, 2024 12:06 PM

சென்னை: 'அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது' என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைந்தார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் தி.மு.க., தொண்டர்கள் அண்ணாமலை உருவபடத்தின் முன் சாலையில் ஆடு வெட்டிக் கொண்டாடினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ., பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.