சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 01:26 AM

சிதம்பரம்:சிதம்பரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ரயில்வே பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவரிடம், சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், அம்பிகாபதி, மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர், மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டி மனு அளித்தனர்.