அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் இறுதிக்கட்ட பணி ஆய்வு
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் இறுதிக்கட்ட பணி ஆய்வு
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் இறுதிக்கட்ட பணி ஆய்வு
ADDED : ஜூன் 03, 2024 07:18 PM

குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் இறுதிக்கட்ட பணியை ஹிந்து சமய அறநிலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் ஊராட்சி அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக இக்கோவில் இருந்து வருகிறது.கடல் மட்டத்திலிருந்து 1117 அடி உயரத்திலும், செங்குத்தாக 1017 படிகள் கொண்டது.
பக்தர்கள் மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் வணங்கி வருகின்றனர்.
மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத குழந்தைகள், முதியோர்கள், நலன் கருதி கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் ஆகியோர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர்.தமிழக முதல்வர் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு ரோப் கார் (கம்பிவட ஊர்தி) அமைக்க உத்தரவிட்டார்.இந்நிலையில் ரோப் கார் பணி முடியும் தருவாயில் இருந்து வருகிறது.இந்த ரோப் கார் திருப்பணி வேலைகளின் நிறைவு பணிகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் பெரியசாமி இன்று மதியம் நேரில் ஆய்வு செய்தார்.
அதில் ரோப் கார் பயணம் செய்யும் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் காத்திருப்பு அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, டிக்கெட் வழங்கும் மையம், மாற்றுத்திறனாளிகள் சாய்வு தளம் உள்ளிட்ட கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்
மலை உச்சியில் உள்ள ரோப் கார் கட்டுமான பணிகளையும் மேலும் பக்தர்கள் உறிய அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், இந்து சமய கண்காணிப்பு பொறியாளர் லால் பகதூர், திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை, மண்டல பொறியாளர் ஆனந்தராஜ், கோவில் செயல் அலுவலர்கள் அமர்நாதன், தங்க ராஜு.,
திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், கோவில் பணியாளர்கள் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தலைமை பொறியாளர் ரோப் கார் பணி அனைத்தும் முடித்து அடுத்த வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அதிகாரிகள் தங்களை தயார் பிடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவு செய்தார்.
ரோப் கார் பணி வரும் 10 நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தலைமை பொறியாளரிடம் கோரிக்கை விடுத்தார்.