கல்லுாரி மாறும் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி தர உத்தரவு
கல்லுாரி மாறும் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி தர உத்தரவு
கல்லுாரி மாறும் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி தர உத்தரவு
ADDED : ஜூலை 10, 2024 01:14 AM
சென்னை:'வேறு கல்லுாரி களுக்கு மாறும் மாணவர்களின் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும்' என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
யு.ஜி.சி., செயலர் தலைமையில், இந்த ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில், விதிகளை பின்பற்றாமல், பல கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கட்டணத்தை திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாக வந்த புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் குறிப்பிட்ட கல்லுாரிகளில் சேர்ந்த பின், வேறு கல்லுாரிகளுக்கோ, துறைகளுக்கோ மாறினால், அவர்கள் ஏற்கனவே சேர்க்கைக்கு செலுத்திய கட்டணத்தை, திரும்ப வழங்க, சில வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.
இதை, கல்லுாரிகளும், பல்கலைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.