மகளுடன் பழகியதை கண்டித்த தந்தை கொலை; மானாமதுரையில் இருவர் கைது
மகளுடன் பழகியதை கண்டித்த தந்தை கொலை; மானாமதுரையில் இருவர் கைது
மகளுடன் பழகியதை கண்டித்த தந்தை கொலை; மானாமதுரையில் இருவர் கைது
ADDED : ஜூன் 18, 2024 12:23 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே மகளுடன் பழகியவரை கண்டித்த தந்தையை அடித்துக்கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே கீழக்கொம்பு காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்தன் மகன் சுரேஷ் 38; இவரது மகளான 10வது படிக்கும் சிறுமியுடன் மானாமதுரை அழகர் கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் 19, பழகி வந்துள்ளார். இதனை சுரேஷ் கண்டித்துள்ளார்.
கடந்த 15 ம் தேதி மீண்டும் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிறுமியின் உறவினரான 18 வயது சிறுவன், சிறுமியை கண்டித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அன்று மாலை சிவப்பிரகாஷ் சிறுமியின் அண்ணனான சிறுவனை பேசுவதற்காக அழைத்துள்ளார். அப்போது சிறுவன் ,அவரது சகோதரன் முத்துச்செல்வம், சிறுமியின் தந்தை சுரேஷும் சென்றுள்ளனர்.
சிவப்பிரகாஷ், அவருடன் வந்த மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் வினோத்19, ஆகிய இருவரும் சுரேஷை கன்னத்தில் அறைந்ததில் கீழே விழுந்து காயமடைந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ் நேற்று இறந்தார். இக்கொலை தொடர்பாக சிவப்பிரகாஷ்,வினோத்தை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.