ADDED : ஜூன் 02, 2024 11:35 PM
தேனி : தேனி மாவட்டம் பொன்னம்படுகையைச் சேர்ந்த விவசாயி செல்லப்பாண்டி 35. நேற்று மாலை 4:00 மணியளவில் அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.