நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:07 AM
சென்னை:நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டிரைவர் உட்பட, 2,329 பணியிடங்களுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளரும், நீதித்துறை பதிவாளருமான ஜெ.செல்வநாதன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு, நேரடி ஆள்சேர்ப்பு நடத்தும் பொருட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, ஏப்., 28ல் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாநிலம் முழுதும் உள்ள விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, இந்த பதவிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை பதிவு செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், கால அவகாசம் வரும் 20 முதல் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி, இதுவரையிலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காத, தகுதியான விண்ணப்பதாரர்கள், 26ம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் வங்கியில், 'சலான்' மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதியும் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
முழுமை பெறாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள், அதே பயனாளர் குறியீட்டை பயன்படுத்தி, அந்த விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.