தமிழக தொல்லியல் துறை கர்நாடகாவில் அகழாய்வு
தமிழக தொல்லியல் துறை கர்நாடகாவில் அகழாய்வு
தமிழக தொல்லியல் துறை கர்நாடகாவில் அகழாய்வு
ADDED : ஜூன் 07, 2024 01:52 AM
சென்னை, தமிழக தொல்லியல் துறை, கர்நாடக மாநிலத்தில் அகழாய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கியில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்ய முடிவு செய்துள்ளது. துங்கபத்ரா நதியின் துணை நதியான மஸ்கியின் கரையில், தமிழர்களின் பேரரசனான ராஜேந்திர சோழன், 1019 - 1020களில், மேலை சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மனை தோற்கடித்து, அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தினார்.
அங்கு தமிழக கலையம்சத்துடன் கட்டடக் கலை மேலோங்கியது. அங்கு ஏற்கனவே அசோகர் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது
இந்நிலையில், சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்து, தமிழக வரலாற்றுடன் தொடர்புடைய இடமாக மஸ்கி இருந்துள்ளது. அதற்கான சான்றுகளை தேடி வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், தமிழக தொல்லியல் துறை அங்கு அகழாய்வு செய்ய உள்ளது.
இந்த அகழாய்வை, கர்நாடகாவில் உள்ள மத்திய பல்கலையுடன் இணைந்து செய்ய உள்ளது. தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், இதற்கான இடங்களை ஆய்வு செய்து வந்துள்ளனர். அதுகுறித்த அறிக்கையை, கர்நாடக அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின் அகழாய்வை துவக்க திட்டமிட்டுள்ளனர்.