Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தினமும் அம்மன்20 : எதிரி தொல்லையா...

தினமும் அம்மன்20 : எதிரி தொல்லையா...

தினமும் அம்மன்20 : எதிரி தொல்லையா...

தினமும் அம்மன்20 : எதிரி தொல்லையா...

ADDED : ஆக 04, 2024 06:42 PM


Google News
Latest Tamil News
கன்னியாகுமரி வாள்வச்சகோஷ்டத்தில் அருள்பாலிக்கிறாள் மகிஷாசுரமர்த்தினி. இவளை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லை தீரும்.

எடதர பொட்டி என்பவரிடம் கணக்காளராக பணிபுரிந்தவர் அம்பிகை உபாசகரான சங்கரவாரியார். ஒருநாள் பணிமுடிந்து இரவில் தனியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இரண்டு பெண்களைக் கண்டார். அதில் ஒருவர் இவரை தனியாக அழைத்தாள். அம்பிகையின் அருளால் வந்திருப்பவர்கள் யட்சிகள் (தெய்வீகப் பெண்கள்) என்பதை அறிந்தார் வாரியார். உடனே அவர்களை அருகில் இருந்த மருத மரத்தின் அடியில் அமர வைத்து, கோயில் கட்டி தருவதாக வாக்களித்தார். அதன்படி வேணாட்டு அரசர் கோயிலைக் கட்டினார். அந்தப் பெண்களில் ஒருவரான மகிஷாசுரமர்தினிக்கு இங்கு, மற்ற ஒருவருக்கு கேரளாவில் நாலம்பலத்தில் இடம் தரப்பட்டது.

கோயில் மண்டப துாண்களில் நடராஜர், காளி, அர்ஜூனன், கர்ணன், இந்திரஜித், லட்சுமணன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே ஏழு அடி உயரத்தில் மகிஷாசுரமர்தினியை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். திருவிதாங்கூர் மன்னர்கள் ஆயுதங்களை இங்கு வைத்து வழிபட்டுள்ளனர். இதனால் இன்றும் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே பூஜை பொருட்கள் வருகின்றன.

எப்படி செல்வது

தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் சாலை வழியாக 8 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 10:00 மணி மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு

97877 60557





      Our Apps Available On




      Dinamalar

      Follow us