கட்சிகளிடம் கருத்துக்கேட்பு தேர்தல் கமிஷன் நடவடிக்கை
கட்சிகளிடம் கருத்துக்கேட்பு தேர்தல் கமிஷன் நடவடிக்கை
கட்சிகளிடம் கருத்துக்கேட்பு தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ADDED : மார் 12, 2025 06:15 AM
சென்னை : 'தேர்தல் அதிகாரிகள் அளவில் தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால், அதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு அரசியல் கட்சிகள் தகவல் தெரிவிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி அளவில் தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பான கருத்துரைகளை, ஏப்ரல், 30க்குள், தேர்தல் கமிஷனுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனுப்பலாம்.
மேலும், கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், தேர்தல் பணிகளை வலுப்படுத்துவது தொடர்பாக, குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து, தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்துஉரையாடலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறிஉள்ளார்.