வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பா? மாநகராட்சிக்கு கண்டனம்
வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பா? மாநகராட்சிக்கு கண்டனம்
வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பா? மாநகராட்சிக்கு கண்டனம்
ADDED : ஆக 03, 2024 04:59 AM

திருப்பூர் : திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணி நடக்கிறது.
இந்த வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் வட மாநில தொழிலாளர்கள் சமைத்து தங்கியுள்ள வீடியோ ஒன்று பரவியது. கழிப்பிடத்தில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் தனியார் வங்கி சி.எஸ்.ஆர்., நிதியுதவியில் பள்ளிகளில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளி வளாகத்தில் இந்த கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சிலர் அங்குள்ள ஒரு அறையில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி கமிஷனர், சம்பந்தப்பட்ட டெண்டர்தாரருக்கு எச்சரிக்கை விடுத்து, தொழிலாளர்கள் அங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. எந்தவிதமான மனித உரிமை மீறலும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வெளிநாநில துாய்மை பணியாளர்களை, கழிப்பறையில் தங்க வைப்பது தான் தி.மு.க.,வின் சமூக நீதியா என, பா.ம.க., தலைவர் அன்புமணியும், பணியாளர்களை மாநகராட்சி பள்ளி கழிப்பறையிலேயே தங்க வைத்தது முழுக்க மனிதநேயமற்ற செயல் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.