Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., மாணவரணி ஜூன் 24ல் போராட்டம்

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., மாணவரணி ஜூன் 24ல் போராட்டம்

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., மாணவரணி ஜூன் 24ல் போராட்டம்

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., மாணவரணி ஜூன் 24ல் போராட்டம்

ADDED : ஜூன் 20, 2024 02:48 AM


Google News
சென்னை:'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து தி.மு.க., மாணவர் அணி சார்பில் ஜூன் 24ல் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

தி.மு.க., மாணவரணிசெயலர் எழிலரசன் அறிக்கை:

நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில்மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட, பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட தேர்வு. சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கனவை சிதைத்து டாக்டர் ஆக முடியாது' என்று கூறி, தடுப்பு சுவர் எழுப்புகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என, மத்திய கல்வித் துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுஉள்ளார். நீட் தேர்வே தமிழகத்திற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவிற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும்.

நீட் தேர்வில் நடந்துஉள்ள மிகப்பெரிய மோசடிகளையும் குளறுபடிகளையும் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜூன் 24ல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us