திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
ADDED : ஜூன் 12, 2024 08:04 PM

சென்னை:விக்கிரவாண்டி தொகுதி இடை தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை மாதம் 10 ம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. திமு.க வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்படு உள்ளார். இதனை தொடர்ந்து திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அமைச்சர்கள் பொன்முடி ,ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு,கே.என்.நேரு. சக்கரபாணி,தா.மோ. அன்பசரசன்,சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சி.வி.கணேசன், லட்சுமணன், உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வரும் 14-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.