Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தினகரன் தோல்வி புலம்பும் கட்சியினர்

தினகரன் தோல்வி புலம்பும் கட்சியினர்

தினகரன் தோல்வி புலம்பும் கட்சியினர்

தினகரன் தோல்வி புலம்பும் கட்சியினர்

ADDED : ஜூன் 06, 2024 02:47 AM


Google News
தேனி:தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. இதில் தினகரன், அ.தி.மு.க., சார்பில் 1999ல் போட்டியிட்டு 3 லட்சத்து 3,881 ஓட்டுகள் பெற்றார். எதிர்த்து தி.மு.க.,வில் போட்டியிட்ட செல்வேந்திரனை 45,806 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றார்.

பின், 2004ல் போட்டியிட்ட தினகரன், காங்., வேட்பாளர் ஆரூணிடம் 21,155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது தினகரன் பெற்ற முதல் தோல்வி. 2024ல் அரசியலில் தன் சிஷ்யராக இருந்த தங்கதமிழ்செல்வனிடம் 2 லட்சத்து 72,825 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இத்தேர்தலில் தினகரன் பெற்ற ஓட்டுக்கள் 2 லட்சத்து 92,668.

கட்சியினர் புலம்பல்:

அ.ம.மு.க.,வினர் சிலர் கூறுகையில், 'தேர்தலில் ஓட்டுப்பதிவு நேரத்தில் 'விட்டமின் ப' வழங்குவதை வேட்பாளரே வேண்டாம்' என்றதாலும் தி.மு.க., சார்பில் சில தடைகள் ஏற்படும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாலும் கடைசி நேரத்தில் கவனிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம்' என புலம்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us