கரூரில் 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., சோதனை
கரூரில் 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., சோதனை
கரூரில் 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., சோதனை
ADDED : ஜூலை 07, 2024 07:50 AM

கரூர்: நில அபகரிப்பு வழக்கில், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் உட்பட 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., சோதனை நடந்து வருகிறது.
கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்களால் கிரையம் செய்தாக யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தன் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்க அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு இருந்தார். முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாகவே உள்ளார்.
10 இடங்களில் சோதனை
இந்நிலையில் இன்று (ஜூலை 07) கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் உட்பட 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., சோதனை நடந்து வருகிறது. 2 டி.எஸ்.பி.,க்கள், 9 ஆய்வாளர்களைக் கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டது.
விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை
விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.நேற்று (ஜூலை 06) எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.