ஒருங்கிணைப்பு குழு தி.மு.க.,வில் அமைப்பு
ஒருங்கிணைப்பு குழு தி.மு.க.,வில் அமைப்பு
ஒருங்கிணைப்பு குழு தி.மு.க.,வில் அமைப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:36 AM
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
இந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, தன் பணிகளை மிக சிறப்பாக செய்தது.
அதே வகையில், வர உள்ள 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை, தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இருப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.