விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்., வெற்றி
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்., வெற்றி
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்., வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 02:16 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்., - எம்.எல்.ஏ., விஜயதரணி, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.,வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலுடன் இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடும் போட்டி நிலவிய இத்தொகுதியில் காங்., வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் இங்கு விஜயதரணி, 87,423 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தற்போது, அதைவிட 1,964 ஓட்டுகள் அதிகம் பெற்று தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றுள்ளார்.
ஓட்டு விபரம்
தாரகை கத்பர்ட் - காங்., -- 89,387
நந்தினி - பா.ஜ., - 50,008
ஜெமினி - நாம் தமிழர் - 7,929
ராணி - அ.தி.மு.க., - 5178.