வணிகவரி அலுவலர்கள் நாளை வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
வணிகவரி அலுவலர்கள் நாளை வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
வணிகவரி அலுவலர்கள் நாளை வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 07:18 AM
மதுரை; 'அனைவருக்கும் வேலைப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக' தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தஅமைப்பின் மாநில துணைத் தலைவர் லட்சுமணன், பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் கூறியிருப்பதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள பல மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியை அளிப்பது வணிகவரித்துறை. தமிழகத்தின் மொத்த வரிவருவாயில் 75 சதவீதத்திற்கும்மேல்ஈட்டும் வணிகவரித்துறையில், அலுவலர்கள், பணியாளர்கள் கடுமையான வேலைப்பளுவால் மனஅழுத்தம், துயரத்தில் உள்ளனர்.
கணினிமயமாக்கப்பட்டும் களஅலுவலரிடம் அறிக்கை பெறுகின்றனர். தொடர் ஆய்வுக் கூட்டங்களை விடுமுறை நாட்களிலும் மேற்கொள்வதால் மனிதஉழைப்பு, நேர விரயம் ஏற்பட்டு மனவேதனைக்கு ஆளாகின்றனர். எனவேதேவையற்ற ஆய்வுக்கூட்டங்களை தவிர்க்க வேண்டும்.துறைமறுசீரமைப்பைமறுஆய்வு செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலைப்பகிர்வை முறைப்படுத்த வேண்டும்.
உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். நேரடி நியமனத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுபோன்றவற்றை வலியுறுத்தி நாளை (மார்ச் 13) மாலை ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.