சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திற்குஎதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திற்குஎதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திற்குஎதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 25, 2024 01:45 AM
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த கோடை விழாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செலவு செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக தி.மு.க., துணைத்தலைவர் கார்கண்ணன் தலைமையில் தி.மு.க., - அ.தி.மு.க.,- காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை நகராட்சி தலைவராக (தி.மு.க.,) ஆனந்த் உள்ளார். நகராட்சிக்குட்பட்ட கலெக்டர் அலுவலக வளாக மருதுபாண்டியர் பூங்காவில் ரூ. பல லட்சம் செலவழித்து கோடைவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நகராட்சி கமிஷனர், பொறியாளர் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செலவு செய்துள்ளனர். கோடை விழாவிற்கு கவுன்சிலர்கள், துணைத்தலைவர் உள்ளிட்டோரை அழைக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
பூங்காவில் ராட்டினம், கடைகள் வைக்க டெண்டர் விடாமல் தன்னிச்சையாக வாடகைக்கு விட்டுள்ளனர். இதுபோல நகராட்சிக்கு வரவேண்டிய வரவு செலவுகளை கணக்கிடாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சில் கூட்டத்திற்கு செல்லும் கவுன்சிலர்களிடம் தீர்மான நிறைவேற்றியதற்கான தனி நோட்டு, வருகை பதிவேடு என இரண்டாக பிரித்து கையெழுத்து பெறும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி துணைத்தலைவர் தலைமையில் அயூப்கான், துபாய் காந்தி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள்,- அ.தி.மு.க.,- காங்., கவுன்சிலர்கள் 12 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவை கலெக்டரிடம் வழங்கினர். விசாரணை நடத்துவதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
தி.மு.க., தலைவராகவுள்ள நகராட்சி நிர்வாக செயல்பாட்டை கண்டித்து தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்களுடன்- அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் இணைந்து புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.