Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நிகழ்ச்சிகளில் பங்கேற்கணும் எம்.எல்.ஏ., --- எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நிகழ்ச்சிகளில் பங்கேற்கணும் எம்.எல்.ஏ., --- எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நிகழ்ச்சிகளில் பங்கேற்கணும் எம்.எல்.ஏ., --- எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நிகழ்ச்சிகளில் பங்கேற்கணும் எம்.எல்.ஏ., --- எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ADDED : ஜூலை 05, 2024 02:20 AM


Google News
சென்னை:மக்களுடன் முதல்வர் மற்றும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படி, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் அன்றாடம் அணுகும், அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர, கடந்த டிச.,18ல், மக்களுடன் முதல்வர் திட்டம், முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் அமலுக்கு வந்தது. இதன் வழியே, 8.74 லட்சம் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வரும் 11ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், திட்டத்தை துவக்கி வைக்க உள்ளேன். அன்றைய தினம், விழுப்புரம் மாவட்டம் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைப்பர். முதல்வரின் காலை உணவு திட்டம், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை, காமராஜர் பிறந்த நாளான, ஜூலை 15ல், திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கி வைக்க உள்ளேன். அன்றைய தினம் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us