Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சென்னை - மங்களூரு உட்பட 9 ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை - மங்களூரு உட்பட 9 ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை - மங்களூரு உட்பட 9 ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை - மங்களூரு உட்பட 9 ரயில்கள் சேவையில் மாற்றம்

ADDED : ஜூன் 04, 2024 12:18 AM


Google News
சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை எழும்பூர் - மங்களூரு இரவு 11:15 மணி விரைவு ரயில் இன்றும், நாளையும், போத்தனுார் வழியாக இயக்கப்படுவதால், கோவை வடக்கு, கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது

 திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில் போத்தனுார் வழியாக செல்வதால், கோவை ரயில் நிலையத்துக்கு செல்லாது. மாற்றாக, இந்த ரயில் போத்தனுாரில் நின்று செல்லும்

 புதுடில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில், இன்று கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும்

 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எர்ணாகுளம் காலை 6:10 மணி விரைவு ரயில், 5, 6ம் தேதிகளில் கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும்

 ஆலப்புழா - தன்பாத் காலை 6:00 மணி விரைவு ரயில், 5, 6ம் தேதிகளில் கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும்

 எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு காலை 9:10 மணி ரயில், 5, 6ம் தேதிகளில் கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும்

 சாலிமார் - திருவனந்தபுரம் இரவு 11:50 மணி விரைவு ரயில், இன்று கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும்

 வைஷ்ணோ தேவி காட்ரா - கன்னியாகுமரி இரவு 10:25 மணி விரைவு ரயில், 10ம் தேதி கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும்

 கோவை - சோரனுார் பயணியர் சிறப்பு ரயில்கள், 7, 10ம் தேதிகளில் போத்தனுார் - கோவை இடையே ஒரு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us